மே மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

மே மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

எந்த காரியத்தைச் செயல்படுவதிலும் ஆர்வம் காட்டும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும், உங்களின் லாபாதிபதி சூரியனின் பார்வையும் பெறுவதால்.. நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும். கடவுளின் அருளால் உங்களுக்கு சகல காரியமும் நன்மையை உண்டாக்கும். உங்களின் நாளாந்த பணிகளில் எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள்.
 
இதுவரை குரு பார்வையைப் பெற்று வந்தீர்கள். இனி உங்களின் தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரத்திலும் பண புழக்கத்திலும் வளம் பெறுவீர்கள். குரு பார்க்கும் இடம் சிறப்பாக அமையும். உங்களின் சுகஸ்தானத்தை குரு பார்ப்பது.. வாகனம் புதிதாக வாங்க வாய்ப்புகள் அமையும்.
 
உங்களின் கைபேசியை மாற்றிக் கொள்வீர்கள். வீடு கட்டும் திட்டம் செயல்பட துவங்கும். புதிய வீடு கட்டுதல், வீட்டுமனை வாங்குதல் சுப செலவுகள் உண்டாகும். வீட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்வீர்கள். வெளிநாடு சென்று வர சிலருக்கு வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சியான இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள். 
 
புதிய நண்பர்களின் சேர்க்கை மேலும் உங்களுக்கு நல்ல அனுபவத்தை உண்டாக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் திறம்பட செயல்படும் மேன்மையை உருவாக்கும். தாயாரின் உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும்.
 
பணபுழக்கம் தாராளமாக இருக்கும். உங்களின் விரையாதிபதி புதன் ஆறில் மறைவதால்.. பழைய கடன் தீரும். புதிய கடன் மூலம் உங்களின் நீண்ட நாள் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் ஈடுபாடு கொண்டாலும் அதிக முயற்சிகளை தவிர்த்து விடுவீர்கள். மன அழுத்தம் குறையும்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
08-05-2024 புதன் இரவு 08.00 முதல் 10-05-2024 வெள்ளி இரவு 01.01 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, சிவப்பு, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், சுப்ரமணியர் வழிபாடும் செய்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள, சகல காரியங்களிலும் நன்மை கிட்டும்.